சென்னை :மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று (ஜூலை 28) முதல் ஆக.10 வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் 187 நாடுகளைச் சார்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதன் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், முதல் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நபர்கள் பங்கேற்கின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், தமிழ்நாடு அரசு சார்பாக சென்னை முழுவதும் செஸ் போட்டிக்கான விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் செஸ் பலகை போன்று அலங்கரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தில் செஸ் ஒலிம்பியாட் ஓவியம் மேலும், மெரினாவில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தில் செஸ் ஒலிம்பியாட் சுவரோவியம் வரையப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இன்று தொடங்குகிறது 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி - சென்னை வர ஆவலுடன் காத்திருப்பதாக மோடி ட்வீட்