சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அந்தந்த மாவட்டங்களின் பெயர்களைக் கொண்டு 'ஐ லவ் கோவை', 'ஐ லவ் திருச்சி' போன்ற எழுத்து வடிவம் பிரசித்தி பெற்ற பூங்காக்கள் அல்லது பிரபலமான இடங்களில் அமைக்கப்பட்டுகின்றன. அந்த வகையில், தற்போது சென்னை மெரினா கடற்கரையில் நடந்துவந்த ’நம்ம சென்னை’ என்ற எழுத்து வடிவம் அமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது.
மெரினா கடற்கரையில், ராணி மேரி கல்லூரி எதிரில், சென்னை மாநகராட்சி, ’ஸ்டார்ட் இந்தியா’ எனும் அமைப்புடன் இணைந்து ’நம்ம Chennai’ எனும் எழுத்து வடிவம் அமைத்து வருகிறது. சுமார் 10 அடி உயரத்தில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 22 லட்சம் ரூபாய் செலவில் இது அமைக்கப்படுகிறது.