தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

44ஆவது சென்னை புத்தகக் காட்சியைத் தொடங்கிவைத்த ஓபிஎஸ்! - துணை முதலமைச்சர் ஓபிஎஸ் செய்திகள்

சென்னை: நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 44ஆவது புத்தகக் காட்சியை துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று (பிப். 24) தொடங்கிவைத்தார்.

44ஆவது சென்னை புத்தகக் காட்சியை தொடங்கி வைத்த துணை முதலமைச்சர் ஓபிஎஸ்!
44ஆவது சென்னை புத்தகக் காட்சியை தொடங்கி வைத்த துணை முதலமைச்சர் ஓபிஎஸ்!

By

Published : Feb 24, 2021, 1:01 PM IST

Updated : Feb 24, 2021, 1:47 PM IST

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள சென்னை புத்தகக் காட்சியைத் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தொடங்கிவைத்தார்.

இன்று (பிப். 24) தொடங்கியுள்ள புத்தகக் காட்சி மார்ச் 9ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. இந்தப் புத்தகக் காட்சியில் 700 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கரோனா கட்டுப்பாடுகள் காரணமாகப் புத்தகக்காட்சி பல வாரங்கள் தாமதமாகத் தொடங்குகிறது.

வாசகர்களின் வருகையை எதிர்பார்த்து பல்வேறு பதிப்பகங்கள் ஏராளமான புதிய நூல்களைப் பதிப்பித்துள்ளன. காலை 11 மணிமுதல் இரவு 8 மணிவரை புத்தகக் காட்சி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெறும்.

நுழைவுக் கட்டணம் 10 ரூபாய், இணையவழியிலும் நுழைவுச்சீட்டு பெறலாம். பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் இல்லை.

புத்தகக் காட்சிக்கு வருபவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அனைத்துப் புத்தகங்களுக்கும் பத்து விழுக்காடு கழிவு அறிவிக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக சிறிய பதிப்பகங்கள், சிற்றிதழ்களுக்கான தனிப் பேழைகள் (அலமாரிகள்) அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பரிந்துரைத்த புத்தகங்கள் தனி அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், புத்தகக் காட்சியின்போது ட்விட்டர் வழியாகச் சிறந்த புத்தகங்களைப் பரிந்துரை செய்யவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஓவியம், பேச்சு, விநாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். வாசிப்பை வளர்க்கும்விதமாக குழந்தைகள் கதை சொல்லும் நிகழ்ச்சி நடைபெறும். உலக அறிவியல் நாள் (பிப். 28), மகளிர் நாள் (மார்ச் 8) ஆகிய சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளன.

இதையும் படிங்க...1971 போர் வெற்றியை பறைசாற்றும் வகையில் விமான படையின் சாகசம்!

Last Updated : Feb 24, 2021, 1:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details