சென்னை:மாதவரம், மாத்தூரைச்சேர்ந்த ஏஞ்சல்(23) என்பவர் கொளத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்தபோது, அதே பகுதியைச்சேர்ந்த கார் ஓட்டுநர் தனுஷ் என்பவரை கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்தார். இவர்களின் காதல் விஷயம் அறிந்த இரு குடும்பத்தினரும் திருமணத்திற்கு மறுத்ததாகக் கூறப்படுகிறது. முன்னதாக, தனது காதலன் தனுஷிற்கு பைக் உள்ளிட்டப்பல பொருட்களை ஏஞ்சல் வாங்கி கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக காதலர்களுக்குள் சண்டை வந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே நேற்று திடீரென தனுஷ், ஏஞ்சலுக்கு ஒரு பெண்ணின் புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் அனுப்பி, தான் இந்த பெண்ணை காதலிப்பதாகக்கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த ஏஞ்சல், இது குறித்து தனுஷிற்கு வீடியோ கால் மற்றும் மெசேஜ் மூலமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.