தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'பெண்களை இழிவுப்படுத்தி மிகக் கேவலமாகப் பேசிய உதயநிதி' - காவல் ஆணையரகத்தில் புகார் - திமுக இளைஞரணி

சென்னை: பெண்களை இழிவுபடுத்தியதாகவும், பொது இடத்தில் ஆபாசமாகப் பேசியதாகவும் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கும்படி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பெண்களை இழிவு படுத்தி பேசிய உதயநிதி ஸ்டாலின் மீது புகார்!
பெண்களை இழிவு படுத்தி பேசிய உதயநிதி ஸ்டாலின் மீது புகார்!

By

Published : Jan 9, 2021, 4:48 PM IST

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ஸ்ரீ ராஜலட்சுமி. இவர் இன்று (ஜன. 09) சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அந்தப் புகார் மணுவில், “திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் மகனும், அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி சமீபத்தில் கட்சிப் பொதுக்கூட்டம் ஒன்றில், 'தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சசிகலாவின் காலில் விழுந்து பதவி பெற்றார். விட்டால் அவரது சேலைக்கு உள்ளே புகுந்திருப்பார்' என்று பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் மிகக் கேவலமான வகையில் பேசியுள்ளார்.

வழக்கறிஞர் ஸ்ரீ ராஜலட்சுமியின் மனு
வழக்கறிஞர் ஸ்ரீ ராஜலட்சுமியின் மனு

இப்பேச்சு சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகப் பரவிவருகிறது. இதன்மூலம் பெண்களை மிகக் கேவலமாகச் சித்திரித்ததுடன், முதலமைச்சர் பழனிசாமியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் உதயநிதி பேசியிருப்பது இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் தண்டனைக்குரியது.

அதனால் பெண்களை இழிவுப்படுத்துதல், பொது இடங்களில் ஆபாசமாகப் பேசுதல் ஆகிய குற்றங்களைப் புரிந்துள்ள உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தார்.

இதையும் படிங்க...நேரம், இடம் ஒதுக்குங்கள்; நான் வருகிறேன்; - ஆ.ராசா மீண்டும் சவால்!

ABOUT THE AUTHOR

...view details