தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தினமும் 20 மணிநேரம் வேலை - துபாய்க்கு வேலைக்குச்சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

துபாய்க்கு பணிப்பெண் வேலைக்குச்சென்ற பெண் இருபது மணி நேரம் வேலை செய்ய சொல்லிக் கொடுமைப்படுத்துவதாக காணொலி ஒன்றை வெளியிட்டு உதவி கேட்டுள்ளார்.

Etv Bharatதுபாய்க்கு  வேலைக்கு சென்ற பெண்ணுக்கு கொடுமை - வீடியோ வெளியிட்டு உதவ கோரிக்கை
Etv Bharatதுபாய்க்கு வேலைக்கு சென்ற பெண்ணுக்கு கொடுமை - வீடியோ வெளியிட்டு உதவ கோரிக்கை

By

Published : Oct 4, 2022, 1:50 PM IST

சென்னை:சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த புவனா என்பவர் கடந்த ஏழு மாதத்திற்கு முன்பு தனியார் ஏஜென்சி மூலம் துபாய்க்கு வேலைக்காக அனுப்பப்பட்டார். கணவன், மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கும் வீட்டில் வேலை செய்ய வேண்டும் என அனுப்பிவைக்கப்பட்டதாகவும், ஆனால் அங்கு 15 பேருக்கு தினமும் 20 மணி நேரம் வேலை செய்து வருவதாகவும் கண்ணீருடன் காணொலியில் தெரிவித்துள்ளார்.

துபாய்க்கு வேலைக்கு சென்ற பெண்ணுக்கு கொடுமை - வீடியோ வெளியிட்டு உதவ கோரிக்கை

மேலும் தன்னை துபாயில் இருந்து மீட்டு சென்னைக்குக் கொண்டுவர உதவுமாறு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவரது கணவர் ஜேம்ஸ் தண்டையார்பேட்டை காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:புதுச்சேரியில் மின்துறை ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்!

ABOUT THE AUTHOR

...view details