சென்னை:சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த ஜூலை 7ஆம் தேதி தனியார் சொகுசு பேருந்து மூலமாக பெங்களூருவில் இருந்து சென்னை வந்துள்ளார். இரவு நேரத்தில் பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது, பேருந்தில் வேலை பார்த்த உதவியாளர் ஒருவர், தன்னிடம் அத்துமீறி தகாத முறையில் நடந்தது அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதுகுறித்து பேருந்து நிர்வாகத்திடம் புகார் அளித்திருக்கிறார். மேலும், இணையதளம் மூலமாக பேருந்து டிக்கெட் முன்பதிவு செய்த சம்பந்தப்பட்ட இணையதள நிறுவனத்திற்கும் இதுகுறித்து புகார் அளித்திருக்கிறார். இதேபோல, பாலியல் சீண்டல் அளித்து மன உளைச்சலுக்கு ஆளாகியதால் சம்பந்தப்பட்ட தனியார் பேருந்து இணையதள நிறுவனத்திடம் இருந்து தனக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்டுள்ளார்.