சென்னை: ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் வசித்து வரும் ராமலட்சுமி, ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் சத்யா(20), தி.நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம்.இரண்டாமாண்டு படித்து வந்தார். இவரும் ஆலந்தூர் ராஜா தெருவை சேர்ந்த சதீஷ்(28) என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில், பரங்கிமலை ரயில் நிலையத்தில் நேற்று இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது வாக்குவாதம் செய்த சதீஷ் ஓடும் ரயிலில் சத்யாவை தள்ளிவிட்டு தப்பி ஓடி விட்டார்.
மாணவியை ஓடும் ரயிலில் தள்ளிவிட்டு தப்பியோடிய இளைஞர் நள்ளிரவில் கைது - woman killed pushed in front of the train
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ஓடும் ரயிலில் தள்ளிவிட்டு தப்பியோடிய இளைஞர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.
![மாணவியை ஓடும் ரயிலில் தள்ளிவிட்டு தப்பியோடிய இளைஞர் நள்ளிரவில் கைது chennai woman killed after being pushed in front of the train, absconding boyfriend arrested](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-16640241-thumbnail-3x2-l.jpg)
chennai woman killed after being pushed in front of the train, absconding boyfriend arrested
இதில் சத்யா தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து மாம்பலம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடி வந்தனர். இந்த நிலையில் சதீஷ் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் சுற்றித்திரிவது போலீசாருக்கு தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, தனிப்படை போலீசார் சதிஷை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க:இளம்பெண் ரயிலில் தள்ளிவிட்டு கொலை
Last Updated : Oct 14, 2022, 7:04 AM IST