சென்னை:திருமுல்லைவாயலில் உள்ள பிரேம்குமார் என்பவரது வீட்டின் தண்ணீர் தொட்டி நீண்ட நாள்களாக சுத்தம் செய்யாமல் இருந்துள்ளது. இந்த நிலையில், இன்று (ஏப். 14) பிரேம்குமார் தொட்டியை சுத்தம் செய்ய உள்ளே இறங்கினார். சிறிது நேரத்தில் அவருக்கு விஷவாயு காரணமாக மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனைக்கண்ட அவரது மகன் பிரதீப் குமார், பக்கத்து வீட்டுக்காரர்களான சாரநாத், பிரமோத் குமார் இருவருடன் உள்ளே இறங்கினார். இவர்களுக்கும் மயங்கி விழுந்துள்ளனர். உடனே அக்கம் பக்கத்தினர் நான்கு பேரையும் மீட்டு, மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.