தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர்: மெட்ரோ சோதனை ஓட்டம் வெற்றி! - metro train trail success news

சென்னை: வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் வரை நடத்தப்பட்ட மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளது என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மெட்ரோ சோதனை ஓட்டம் வெற்றி!
மெட்ரோ சோதனை ஓட்டம் வெற்றி!

By

Published : Dec 27, 2020, 5:08 PM IST

சென்னை வண்ணாரப்பேட்டையிலிருந்து திருவொற்றியூர் வரை இன்று (டிச.27) காலை மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

மொத்தம் ஒன்பது கிலோமீட்டர் சுரங்கப் பாதை மற்றும் திறந்தவெளி மெட்ரோ தண்டவாளத்தில் இது பயணிக்கிறது. இரவு பகலாக மெட்ரோ நிர்வாகிகள் பணிபுரிந்ததால் இந்த வழித்தடம் விரைவில் முடிந்தது என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மெட்ரோ சோதனை ஓட்டம் வெற்றி!

இந்த சோதனை ஓட்டத்தின்போது பிரதீப் யாதவ், ராஜீவ் நாராயணன் உள்ளிட்ட அலுவலர்கள் இருந்தனர். விரைவில் இது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க...அதிமுக தலைமையில்தான் கூட்டணி; அயராது உழைத்து ஆட்சி அமைப்போம் - கே.பி.முனுசாமி

ABOUT THE AUTHOR

...view details