தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னையில், வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் நில வேம்பு குடிநீர் முகாம்.! - chennai dengue fever

சென்னை: சென்னை குரோம்பேட்டையில் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் நிலவேம்பு குடிநீர் (கசாயம்) வழங்கப்பட்டது.

வணிகர் சங்கம்

By

Published : Nov 7, 2019, 8:48 AM IST

சென்னை புறநகர் பகுதியான குரோம்பேட்டை பகுதியில் டெங்கு பாதிப்புகள் அதிகரித்து வருவதால் பொதுமக்களின் நலனை கருதி, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பாக அனைத்து வியாபாரிகள் நலச்சங்கத்தினரும் நிலவேம்பு குடிநீர் (கசாயம்) வழங்கும் பணி நேற்று தொடங்கியது.

இதையடுத்து வணிகர்கள், அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கும் சென்றும் நிலவேம்பு குடிநீர் (கசாயம்) வழங்கினர். இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி குடித்தனர். இந்நிகழ்ச்சியில் வணிகர் சங்கத்தின் தலைவர் ஆர் மோகன், செயலாளர் ராம்குமார் அமல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த பணி சுமார் ஒரு மாத காலம் தொடர்ந்து நடக்கிறது.

வணிகர் சங்கம் சார்பில் நிலவேம்பு குடிநீர் முகாம் தொடங்கப்பட்டது.

மேலும் படிக்க:நாகையில் நான்கு பேருக்கு டெங்கு காய்ச்சல்!

ABOUT THE AUTHOR

...view details