தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 10, 2021, 12:24 PM IST

ETV Bharat / city

பயணி  மயங்கியதால் மத்திய அமைச்சர் சென்ற விமானம் தாமதம்

மத்திய அமைச்சா் உள்பட 147 போ் பயணித்த விமானம் புறப்பட்ட நேரத்தில் பயணி ஒருவருக்கு திடீா் மயக்கம் ஏற்பட்ட நிலையில், விமானம் காலதாமதமாகப் புறப்பட்டது.

சென்னை-டெல்லி ஏா்இந்தியா விமானம் புறப்படும்போது,பயணிக்கு ஏற்பட்ட திடீா் மயக்கத்தால்,மத்திய அமைச்சா் உட்பட 147 போ் பயணித்த விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக சென்றது.
சென்னை-டெல்லி ஏா்இந்தியா விமானம் புறப்படும்போது,பயணிக்கு ஏற்பட்ட திடீா் மயக்கத்தால்,மத்திய அமைச்சா் உட்பட 147 போ் பயணித்த விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக சென்றது.

சென்னையிலிருந்து டெல்லி செல்லும் ஏா்இந்தியா விமானம் இன்று (மார்ச். 10) காலை 6.10 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. இவ்விமானத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சா் கிஷன் ரெட்டி உள்பட 147 பயணிகள் இருந்தனா்.

இந்நிலையில், விமானம் ஓடுபாதையில் புறப்படத் தயாரானபோது, விமானத்திலிருந்த சென்னை பெரம்பூரைச் சோ்ந்த தயாளன் (64) என்ற பயணிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து விமானி, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தாா். அதனைத் தொடர்ந்து உடனடியாக விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டன.

தொடர்ந்து விமான நிலைய மருத்துவக் குழுவினா் விமானத்திற்குள் ஏறி அவரை பரிசோதித்து சிகிச்சை அளித்தனா். அதன்பின்பு அவா் மயக்கம் தெளிந்து எழுந்தாா். ஆனாலும், பயணி தான் தொடா்ந்து பயணம் செய்ய விரும்பவில்லை என்று கூறினாா்.

இதையடுத்து தயாளனின் பயணம் ரத்து செய்யப்பட்டு, விமானத்திலிருந்து அவர் இறக்கப்பட்டாா். அதன்பின்பு ஏா்இந்தியா விமானம் 146 பயணிகளுடன் காலை 7.05 மணிக்கு சென்னையிலிருந்து டில்லி புறப்பட்டுச் சென்றது.

இதையும் படிங்க...17 வருடங்களுக்கு பின்னர் ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கை வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details