தமிழ்நாடு மின்சார வாரியம், மின் பகிர்மான கழகத்தால் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு அதற்கான கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது.மாநகர பகுதிகளில் உள்ள வீடுகளை பொறுத்தவரை முதல் 100 யூனிட்கள் வரை மின்சாரம் இலவசம் என்றும், அதனை தாண்டியவுடன் 2.50 பைசா கட்டணமாக நிர்ணயக்கப்பட்டுள்ளது. மின் வாரியம் பொதுமக்களின் வீடுகளுக்கு மின் இணைப்பாக 100 யூனிட்கள் வரை இலவசமாக வழங்கப்படுவது ஒரு சலுகை போன்று தெரிந்தாலும், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும்போது அச்சலுகையும் தாண்டி மின் நுகர்வோர்கள் அதிகம் பாதிக்கப்படும் நிலையில்தான் உள்ளனர்.
சில வருடங்களுக்கு முன்பு மாதம் ஒரு முறை மட்டுமே மின் கட்டணம் செலுத்தப்பட்ட போது, பொதுமக்களுக்கு எளிதாக இருந்த மின் கட்டணம் தற்போது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் செலுத்துவதால் அதிக கட்டணமும், மறைமுக சலுகை இழப்பும் ஏற்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.