தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திருவேற்காடு நர்சிங் மாணவி தற்கொலை விவகாரம்; சிபிசிஐடிக்கு மாற்றம்

திருவேற்காடு நர்சிங் மாணவி தற்கொலை விவகாரத்தில் விசாரணை அலுவலரை நியமித்தது மட்டுமின்றி வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

திருவேற்காடு நர்சிங் மாணவி தற்கொலை விவகாரம் சிபிசிஐடிக்கு மாற்றம்
திருவேற்காடு நர்சிங் மாணவி தற்கொலை விவகாரம் சிபிசிஐடிக்கு மாற்றம்

By

Published : Jul 31, 2022, 2:04 PM IST

சென்னை: திருவேற்காடு பகுதியில் நர்சிங் கல்லூரி விடுதியுடன் செயல்பட்டு வருகிறது. 100க்கும் மேற்பட்ட மாணவிகள் பயிலும் இந்தக்கல்லூரியில் மேல் தளத்தில் விடுதியும், கீழ் தளத்தில் கல்லூரியும் செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் ஈரோட்டைச்சேர்ந்த 19 வயது மாணவி, இரண்டாம் ஆண்டு நர்சிங் படிப்பு பயின்று வந்தார்.

இவர் நேற்று (ஜூலை 30) காலை வகுப்பிற்குச்சென்று விட்டு மதிய உணவிற்குத்தோழிகளுடன் விடுதிக்கு வந்தவர், தோழிகளை சாப்பிடச்செல்லுமாறு கூறிவிட்டு அறைக்குச்சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் மாணவி வராததால் சந்தேகமடைந்த அவரது தோழிகள் மேலே சென்று பார்த்தபோது அறையின் கதவு மூடப்பட்டு, தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது.

கதவைத்தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்து ஜன்னல் வழியாக பார்த்த போது மாணவி தற்கொலை செய்துகொண்டதைக் கண்டு, அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள், உடனடியாக கதவை உடைத்து உள்ளே சென்று மாணவியை மீட்டனர். இருப்பினும், மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.

இதுகுறித்து, கல்லூரி நிர்வாகத்திற்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த மாணவியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து வந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மகள் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி சாலை மறியல் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினார்கள்.

இதுகுறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். தற்கொலைக்குக் காரணம் காதல் விவகாரமா? அல்லது மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டாரா? சக மாணவிகளுடன் தகராறு ஏற்பட்டதா? அல்லது கல்லூரி நிர்வாகத்தில் ஏதாவது தகராறு ஏற்பட்டதா? எனப்பல்வேறு சந்தேகங்கள் இருக்கக்கூடிய நிலையில் தற்போது இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற உத்தரவின்படி தற்போது வழக்கு மாற்றப்பட்டு விசாரணை அலுவலராக காவல் ஆய்வாளர் அகிலா நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்கொலை குறித்த விசாரணையை அவர் இன்றே (ஜூலை 31) தொடங்க உள்ளார்.

தற்கொலையைக் கைவிடு

இதையும் படிங்க:சென்னையில் நர்சிங் மாணவி கல்லூரி விடுதியில் தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details