சென்னை:சிபிஎஸ்சி பிளஸ் 2 தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளியை சேர்ந்த ஆ. கிரண்மயி என்கின்ற மாணவி கணிதம், உயிரியல், வேதியியல் மூன்று பாடப்பிரிவில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றதோடு 500-க்கு 496 மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். மேலும் இயற்பியலில் 99 மதிப்பெணும், ஆங்கிலத்தில் 97 மதிப்பெண் பெற்றுள்ளார்.
சிபிஎஸ்சி பிளஸ் 2 தேர்வு: இந்திய அளவில் 3ஆம் இடம் பிடித்து சென்னை மாணவி அசத்தல்!
சிபிஎஸ்சி பிளஸ் 2 தேர்வில் 500-க்கு 496 மதிப்பெண்களுடன் மூன்று பாடங்களில் நூறு மதிப்பெண்கள் பெற்று சென்னை மாணவி கிரண்மயி, இந்திய அளவில் மூன்றாவது இடம் பிடித்தார்.
சி.பி.எஸ்.சி பிளஸ் டூ தேர்வில் 496 மதிப்பெண்கள் பெற்று சென்னை மாணவி அசத்தல்
இதுகுறித்து பேசிய மாணவி, விடா முயற்சியாக படிக்க வேண்டும். புத்தகத்தில் இருப்பதை அனைத்தையும் படிக்க வேண்டும். இதுவே தன்னுடைய வெற்றிக்கு காரணம் என்றும், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் உதவியால் இந்த மதிப்பெண் பெற்றதாக அவர் தெரிவித்தார். விடாமுயற்சியுடன் படித்தால் கண்டிப்பாக வெற்றி பெற முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிங்க:மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - மா.சுப்பிரமணியன்
Last Updated : Jul 23, 2022, 12:48 PM IST