பெருநிறுவனங்கள் தொழிலாளர்களுக்குப் பயிற்சி அளிக்க ஏராளமான தொகையை செலவு செய்ய வேண்டியுள்ளது. மேலும், இதற்கு நீண்ட காலம் தேவைப்படுகிறது. இந்தச் சந்தையை குறிவைத்து களமிறங்கியுள்ளது சென்னையைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் ஸ்வயர்காம்ப் கிருஹாஸ் வி.ஆர். (Square Comp – GRAHA’s VR). இந்நிறுவனத்தின் மெய்நிகர் (Virtual Reality) சார்ந்த செயலி கூகுள் பிளே ஸ்டோரில் அறிமுகம்செய்யப்பட்டது. இதனை முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி தொடங்கிவைத்தார்.
இந்தப் புதிய செயலி மூலம் பயனாளர்கள் தாங்களே இயந்திரத்தை இயக்குவதைப் போல மெய்நிகர் பயிற்சியைப் பெற முடியும். குறிப்பாக இந்தச் செயலி சிஎன்சி இயந்திரங்கள் இயக்கம் பற்றி முழுமையாக அறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மெய்நிகர் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய சென்னை ஸ்டார்ட்அப் இது குறித்து கிருஹாஸ் வி.ஆர். நிறுவனத்தைத் தொடங்கிய ஸ்ரீநிவாசன், ஸ்ரீராம் ஆகியோர் பேசுகையில், "மெய்நிகர் தொழில்நுட்பம் மூலம் நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு நான்கு மடங்கு வேகமாகப் பயிற்சி அளிக்க முடியும். மேலும், இவை பயிற்சிக்கான செலவுகளைப் பாதியாகக் குறைக்கும்.
புதிய தொழிலாளர்களுக்குப் பயிற்சி அளிப்பது மட்டுமல்லாது, ஏற்கனவே பணியாற்றும் ஊழியர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கவும் இவை உதவிகரமாக இருக்கும். கரோனா தொற்று போன்ற அசாதாரணமான சூழல்களில் தொடர்பில்லாத வகையில் பயிற்சி அளிக்க இது மிகப் பெரிய அளவில் உதவும்.
தொழிலாளர்கள் பயிற்சிக்காக மெய்நிகர் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய சென்னை ஸ்டார்ட்அப் கடந்த பல ஆண்டுகளாகப் பல்வேறு துறைகளில் தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டுள்ளது, ஆனால் தொழிலாளர் பயிற்சியில் இதுவரை பெரிய அளவில் மாற்றங்களோ, வளர்ச்சியோ ஏற்படவில்லை. எங்களது தொழில்நுட்பம் பல ஆண்டுகாலப் பிரச்னையைச் சரிசெய்யும் என நம்புகிறோம்" என்றனர்.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி திரட்ட நடிகை லட்சுமி மஞ்சு 100 கி.மீ. சைக்கிள் பயணம்!