தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னை - இலங்கை இடையே 4 விமான சேவைகள் ரத்து - Indigo

இலங்கைக்கு செல்லும் இரவு நேர விமானங்களில் பயணிகள் குறைவாக இருந்ததால் 4 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை-இலங்கை விமான சேவைகள் ரத்து
சென்னை-இலங்கை விமான சேவைகள் ரத்து

By

Published : May 15, 2022, 9:51 AM IST

சென்னை: இலங்கையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால், சென்னையிலிருந்து இரவு நேரங்களில் இலங்கைக்கு செல்லும் விமானங்களில் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டன. போதிய பயணிகள் இல்லாததால், இன்று (மே 15) அதிகாலை 12.20 மணிக்கு சென்னையில் இருந்து இலங்கையின் கொழும்பு நகருக்கு செல்லும் ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டது.

அதேபோல, இலங்கையிலிருந்து சென்னைக்கு அதிகாலை 2.25 மணிக்கு வரவேண்டிய ஶ்ரீ லங்கன் ஏா்லைன்ஸ் விமானமும், சென்னையிலிருந்து அதிகாலை 3.25 மணிக்கு இலங்கை செல்லும் ஶ்ரீலங்கன் ஏா்லைஸ் விமானமும் ரத்து செய்யப்பட்டள்ளன. அதோடு இன்றிரவு இலங்கை-சென்னை இடையேயான இரண்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த விமானங்கள் நாளை(மே 16) வழக்கம்போல் இயக்கப்படும் என்றும் விமானநிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'டிரெண்டிங்: ரூ.500க்கு - வாங்கக் கூடிய பொருட்கள் என்னென்ன ?'

ABOUT THE AUTHOR

...view details