சென்னை அயனாவரம் நாராயணன் தெருவை சேர்ந்தவர் பத்மினி. இவருக்கும் இவரது மருமகள் மேனகாவிற்கும் சில நாட்களாகச் சொத்து தொடர்பான பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 15ஆம் தேதி பத்மினியை காணவில்லை என அவரது உறவினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், மேனகா தனது மாமியாரை நான்கு சக்கர வாகனத்தில் கடத்தி உறவினர் வீட்டில் வைத்து கொடுமை செய்தது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து, பத்மினியை மீட்ட காவல்துறையினர் மேனகாவை கைது செய்தனர். அவரிடம் விசாரணை செய்ததில் பல தகவல் வெளியாகியுள்ளன. மாமியார் பத்மினியை துப்பாக்கி வைத்து அடித்து சித்தரவதை செய்துள்ளார். மேலும் மேனகாவின் மாமனார் சுப்புராயன், அவரது மகன்கள் செந்தில் குமார் மற்றும் ராஜ்குமாருக்கு கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களை 2014ஆம் ஆண்டு பிரித்து கொடுத்துள்ளார்.
அதில் ஏற்பட்ட பிரச்னையில் ராஜ்குமார் அண்ணி மேனகாவை கத்தியால் குத்தியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அண்ணன் செந்தில் குமார், தம்பி ராஜ்குமாரை வெட்டிக் கொலை செய்துள்ளார். இது தொடர்பாக மணிமங்கலம் காவலர்கள் வழக்குப் பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர். பின்னர் ஜாமினில் வெளி வந்த செந்தில் குமார் மீண்டும் தந்தை சுப்புராயனிடம் சொத்துக்காக தகராறு செய்துள்ளார்.
இந்நிலையில் 2018ஆம் ஆண்டு சுப்புராயன் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். அதன்பிறகு செந்தில் குமார் தலைமறைவானார். மணிமங்கலம் காவலர்கள் வழக்குப் பதுவு செய்து விசாரணை செய்ததில், செந்தில் குமார் நண்பர்கள் ராஜேஷ் கண்ணா மற்றும் சில கூட்டாளிகளை போலீசார் கைது செய்திருப்பது தெரியவந்துள்ளது.
மாமியாரை கடத்திய மருமகள்.! எனவே, மகன் செந்தில் குமார் தான் கொலை செய்து தப்பித்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் தான் மாமனார் இறந்த பிறகு சொத்து மாமியார் பத்மினிக்கு சென்றதால், அவரை கடத்தி சொத்தை அபகரிக்க மேனகா முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக அயனாவரம் காவலர்கள் மாமனார் சுப்புராயன் மற்றும் மைத்துனர் கொலை வழக்கிலும் மேனகாவுக்கு தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதையும் படிங்க: இளைஞரைக் கடத்தி பணம் கேட்டு மிரட்டிய கும்பல் கைது!