திருவல்லிக்கேணி பாரதி சாலையைச் சேர்ந்த சிறுவன் கவின், தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். கரோனா அச்சுறுத்தலைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், ஊரடங்கு வேளையில் காவல் துறையினர் படும் இன்னல்கள், கடுமையான சூழலிலும் காவல் துறையினர் செய்து வரும் உதவிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவற்றைத் தொகுத்து, இரண்டு நிமிட குறும்படத்தை சிறுவன் கவின் தயாரித்து வெளியிட்டுள்ளார். இது காவல் துறையினர் இடையே பெறும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கையில் காவல் துறை - குறும்படம் வெளியிட்டு அசத்திய சிறுவன்! - கரோனா
சென்னை: கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் காவல் துறையினர் படும் இன்னல்கள் குறித்து 5ஆம் வகுப்பு மாணவன் வெளியிட்டுள்ள குறும்படம் காவல் துறையினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
film
மேலும் இந்த சிறுவன் ஐஸ் ஹவுஸ், ராயபேட்டை, மெரீனா, மைலாப்பூர் பகுதிகளில் பணியில் இருக்கும் காவலர்களுக்கு தினந்தோறும் வீட்டிலேயே தயாரித்து மோர் கொடுத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: லாக்டவுனில் லாக் ஆன கேன்சர் மருந்து... நோயாளியின் உயிர் காக்க 430 கிமீ பறந்த ’ராசாளி’ ஏட்டய்யா