தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன்! - பட்டியல் இனத்தவர்கள் பற்றி அவதூறாக பேசி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டதாக வழக்கு

வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் ஆஜராகாததால் பிடிவாரண்டில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுனுக்கு ஜாமீன் வழங்கி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

நிபந்தனை ஜாமீன்
நிபந்தனை ஜாமீன்

By

Published : Apr 1, 2022, 11:07 PM IST

சென்னை: பட்டியல் இனத்தவர்கள் பற்றி அவதூறாகப் பேசி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டதாக நடிகை மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோரை கடந்த ஆண்டு போலீசார் கைது செய்தனர். பின் அவர்கள், ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும், இருவருக்கும் எதிரான வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்நிலையில், விசாரணைக்கு ஆஜராகாத மீரா மிதுனுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனால், ஜாமீன் கோரி மீரா மிதுன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

நிபந்தனை ஜாமீன்: இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.அல்லி, மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். அதில், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை வாரம்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 10.30 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மாடர்ன் பள்ளிகள் விரைவில் உருவாக்கப்படும் - மு.க. ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details