சென்னை கொரட்டூரில் உள்ள பக்தவத்சலம் வித்யாஷரம் பள்ளியில், ஒசுகாய் கராத்தே கோபுடோ என்னும் அமைப்பின் 21ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு சிறப்பு கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டது.
சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு கோபுடோ பயிற்சி!
சென்னை: கொரட்டூர் அருகே தனியார் பள்ளியில், தமிழ்நாடு உட்பட வட மாநில மாணவர்களுக்கு 'கோபுடோ' போன்ற சிறப்பு கராத்தே பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
பயிற்சியில் சிறப்பு விருந்தினராக கராத்தே தியாகராஜன் கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார். இந்த கராத்தே பயிற்சியில் டெல்லி, குஜராத், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
மே 9ஆம் தேதியிலிருந்து 12ஆம் தேதி வரை நான்கு நாட்கள் மாணவர்களுக்கு பயிற்சி மேற்கொள்ளப்பட உள்ளது. முதல் நாளான இன்று ஜெர்மனியைச் சேர்ந்த கெவின் சாப்ளின் ஒக்கினவா என்பவரின் தலைமையில் கராத்தே பயிற்சி உட்பட, கோபுடோ(kobudo) ஆயுத பயற்சியும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது. பயிற்சியின் இறுதிநாளில் நடத்தப்படும் போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.