அதன் ஒரு பகுதியாக பூவிருந்தவல்லி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட ஆவடி, பூவிருந்தவல்லி, மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் 66 தனியார் பள்ளிகளைச் சார்ந்த 348 வாகனங்களில் 255-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
இதனை பூவிருந்தவல்லி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சம்பத் ஆய்வு செய்து வாகனங்களில் அவசர கால வழி, படிக்கட்டுகள், சீட்டுகள், தீயணைப்புக் கருவிகள் என அனைத்தும் கவனிக்கப்பட்டது. முறையாக இல்லாத 13 வாகனங்கள் திருப்பி அனுப்பட்டன. அனுமதி மறுக்கப்பட்ட வாகனங்களின் குறைகளை சீர் செய்து மீண்டும் ஆய்வுக்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டது.