சென்னை:தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் சென்னை டிபிஐ வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தனியார் பள்ளிகளின் கட்டணத்தை மாற்றாவிட்டால் பள்ளியை மூடும் போராட்டம்! - தனியார் பள்ளிகளின் கட்டணத்தை மாற்றாவிட்டால் பள்ளியை மூடும் போராட்டம்
தமிழ்நாட்டிலுள்ள தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை, கல்வி கட்டண நிர்ணய குழு மாற்றித் தராவிட்டால் பள்ளிகளை ஒரு வாரம் மூடும் போராட்டம் நடத்தப்படும் என அக்கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.
தனியார் பள்ளிகள் கல்வி கட்டண நிர்ணயக் குழுத் தலைவர் பாலசுப்ரமணியத்திடம் கல்வி கட்டணத்தை மாற்றி அமைத்துத் தர வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர். அதற்கு முன்னதாக தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தை மாற்றி அமைத்துத் தர வேண்டும் என வலியுறுத்திப் போராட்டம் நடத்தினர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு நர்சரி பிரைமரி, மெட்ரிகுலேஷன், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் செயலாளர் நந்தகுமார், 'தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் மிகவும் குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் செலவுகள் குறித்து அறிக்கையை அளித்தாலும், கல்விக் கட்டண நிர்ணயக் குழு ரூ.1,500 என கட்டணத்தை நிர்ணயம் செய்து அளிக்கின்றனர். இதனால், பள்ளிகளை நடத்துவது மிகவும் சிரமமாக உள்ளது.