சென்னை:திருவல்லிக்கேணி கற்பக கன்னியம்மன் கோவில் தெருவைச்சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜா(49)-வை கஞ்சா விற்பனையில் ஏற்பட்டத்தகராறில் நேற்று (ஆக.16) விக்டோரியா மருத்துவமனை அருகே ஓட ஓட 6 பேர் கொண்ட ரவுடி கும்பல் வெட்டிப்படுகொலை செய்த சம்பவம் குறித்து ஜாம்பஜார் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து ஜாம்பஜார் போலீசார் நடத்திய விசாரனையில், முன்னதாக அப்பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வினோத், பாலாஜி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள நிலையில் தற்போது, தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனையில் சிட்டிசேகரின் மகன்களான சூர்யா, தேவா ஆகியோர் அக்குற்றச்செயலில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், இக்குற்றச்செயலுக்கு போட்டியாக ஆட்டோ ஓட்டுநர் ராஜா இருந்தநிலையில் இவர்கள் இரண்டு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, சூர்யாவும் தேவாவும் தங்களது கூட்டாளிகளுடன் இணைந்து ஆட்டோ ஓட்டுநர் ராஜாவை கொலைசெய்த சம்பவத்தில் ஈடுபட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
முன்னதாக இக்கும்பல், அரும்பாக்கம் ஐஸ் ஹவுஸ் பகுதியைச்சேர்ந்த அஜித்குமார்(25), ஸ்ரீரஞ்சன்(19) ஆகியோர் கஞ்சா வாங்க வந்தபோது ஏற்பட்டத்தகராறில் அவர்களை வெட்டிவிட்டு, பின்னர் ஆட்டோ ஓட்டுநர் ராஜாவைக்கொலை செய்து விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.