கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ளது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இல்லம். அங்கு அவரது பாதுகாப்புப் பிரிவில் சுழற்சி முறையில் ஆண் மற்றும் பெண் காவலர்கள் பணியில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில், அங்கு பணியில் ஈடுபட்டு வந்த பெண் காவலர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியாகி இருப்பதாகவும், எனவே மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் செய்தி வெளியானது.
இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை காவல்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், குறிப்பிட்ட அந்தப் பெண் காவலர் கடந்த 30ஆம் தேதி வரை மட்டுமே முதலமைச்சர் வீட்டிற்கு வெளியே பாதுகாப்பில் இருந்ததாகவும், பின்னர் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.