நாடாளுமன்றத்தில் இம்மாத தொடக்கத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இதேபோல, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டங்களையும் பேரணிகளையும் நடத்த அனுமதி கோரி, 54-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் சென்னை காவல் துறையிடம் விண்ணப்பித்திருந்தனர்.
இந்நிலையில், அனுமதி கோரி விண்ணப்பித்திருந்த அனைவருக்கும் சென்னை காவல் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீசுக்கு உரிய பதிலை அளிக்காததால், போராட்டங்கள் நடத்த அனுமதி கோரி விண்ணப்பித்திருந்த அனைவருக்கும் அனுமதி வழங்க சென்னை காவல் துறை மறுத்துள்ளது.