கரோனா தொற்று அதிகரிப்பைத் தொடர்ந்து ஊரடங்கை தீவிரப்படுத்தும் விதமாக அண்ணா சாலையில் உள்ள அண்ணா மேம்பாலத்தை ஒட்டிய சாலைகள், தடுப்புகள் கொண்டு நேற்று அடைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஊரடங்கு என்ற ஒன்று அமலில் உள்ளதா என்று கேட்கும் அளவுக்கு மக்கள் வாகனங்களில் படையெடுத்தனர். இதனால் மாநகரின் முக்கிய சாலைகளான தேனாம்பேட்டை, அண்ணா சாலை போன்றவை அடைக்கப்படுவதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.