தமிழ்நாடு

tamil nadu

உரிமம் பெற்ற துப்பாக்கிகளை காவல் நிலையத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தல்!

By

Published : Mar 2, 2021, 6:56 PM IST

சென்னை: தேர்தலை முன்னிட்டு உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள் காவல் நிலையத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

gun
gun

தேர்தல் பிரிவு

சென்னை வேப்பேரியில் காவல் ஆணையர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவு செயல்பட்டுவருகிறது. ஒரு துணை ஆணையர், ஒரு கூடுதல் துணை ஆணையர், 2 உதவி ஆணையர்கள், 4 காவல் ஆய்வாளர்கள் என 50 பேர் கொண்ட காவல் துறையினர் இந்தத் தேர்தல் பிரிவில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

சென்னை காவல் துறையின் எல்கைக்குள்பட்ட 30 தொகுதிகள் கண்காணிக்கப்பட்டுவருகின்றன. சென்னை காவல் துறையின் நுண்ணறிவுப் பிரிவு காவல் துறையினருடன் சேர்ந்து மிகவும் பதற்றமானவை, பதற்றமானவை எனத் தொகுதிகளைக் கண்டறிந்து, அதனைத் தேர்தல் ஆணையத்திடம் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தேர்தல் நடத்தை விதிகளை மீறிச் செயல்படும் நபர்கள் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுப்பது, மிகவும் பதற்றமான, பதற்றமான வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், கடந்த தேர்தல்களில் பதிவான வழக்குகளின் தற்போதைய நிலவரம் குறித்து ஆய்வுசெய்தல் போன்ற பணிகளில் காவல் துறையின் தேர்தல் பிரிவு தீவிரமாக ஈடுபட்டுவருகிறது.

துப்பாக்கிகள் ஒப்படைக்க அறிவுறுத்தல்

தேர்தலை முன்னிட்டு உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள் காவல் நிலையத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் உரிமம் பெற்ற 2,700 பேர் துப்பாக்கிகள் வைத்துள்ளனர்.

இதில் 500 துப்பாக்கிகள் வங்கி போன்ற நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுவைத்துள்ளது. 600 துப்பாக்கிகள் இதுவரை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், லாக்கரிலும் வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பறக்கும் படை! - சத்யபிரதா சாகு

ABOUT THE AUTHOR

...view details