தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

செல்போனில் பேசி நூதனக் கொள்ளையில் ஈடுபடும் கும்பல் - காவல் ஆணையர் எச்சரிக்கை - நூதனக் கொள்ளை

சென்னை: ஆசையைத் தூண்டும் வகையில் செல்போனில் பேசி நூதனமாக வங்கிக் கணக்கு மூலம் பணத்தைத் திருடும் கும்பலிடம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் அறிவுறுத்தியுள்ளார்.

viswanathan
viswanathan

By

Published : Feb 7, 2020, 5:29 PM IST

வங்கிப் பரிவர்த்தனைகளை மிகவும் எச்சரிக்கையான முறையில் பொதுமக்கள் கையாள வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, காவல்துறை மற்றும் ஆக்ஸிஸ் வங்கி இணைந்து தயாரித்த ’வாய்க்கு போடுங்க பூட்டு’ என்ற குறும்படத் தகட்டினை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் இன்று வெளியிட்டார்.

பின்னர் மேடையில் பேசிய காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், “வங்கிப் பரிவர்த்தனைகளை பாதுகாப்பான முறையில் பொதுமக்கள் எப்படி கையாள வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக இந்தக் குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நடித்துள்ளனர்.

மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்

பொதுமக்களின் ஆசையைத் தூண்டும் வகையில் அடையாளம் தெரியாத நபர் போனில் பேசி வங்கியின் கடவு எண்கள் மூலம் பணம் உள்ளிட்டவற்றை திருடுகின்றனர். மேலும், பொதுமக்களிடம் பரிசு விழுந்திருப்பதாகக் கூறியும் மோசடியில் ஈடுபடுகின்றனர். லோன் வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட நான்கு பேர் கொண்ட கும்பலை தற்போது மத்திய குற்றப்பிரிவினர் கைது செய்துள்ளனர்.

பொதுமக்களிடம் வங்கி தொடர்பான கடவு எண்கள், கணக்கு எண்கள் உள்ளிட்டவற்றை எந்த ஒரு வங்கி அதிகாரிகளும் கேட்கமாட்டார்கள். அவற்றை யாரிடமும் பகிரக் கூடாது. எனவே, மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்“ என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ‘சதுரங்க வேட்டை’ பாணியில் அரங்கேறிய மோசடி - திமுக பிரமுகர் உள்பட மூவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details