வடசென்னை வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் சென்னை காவல் துறைக்கு, 500 சிசிடிவி கேமராக்கள் வழங்கும் நிகழ்ச்சி தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் தினகரன், காவல் துறை உயரதிகாரிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் பேசியபோது, “இந்த கண்காணிப்பு கேமராக்கள் வருவதற்கு முன்பு கடுமையான மன அழுத்தம், உடல் சோர்வு எங்களுக்கு ஏற்படும். ஆனால், இவை அமைக்கப்பட்ட பின்பு, எங்களது பணிகள் சற்று வித்தியாசமாக மாறியுள்ளது. திருட்டு நடந்தால் அதை கண்டுபிடிப்பது மிகக் கடினமாக ஒரு காலத்தில் இருந்தது. 2010க்குப் பிறகு தங்கத்தின் விலை மிக அதிகமானதால் செயின் பறிப்பு நிகழ்வுகள் அதிகமாகின. ஆனால், கேமராக்கள் அமைக்கப்பட்ட பின்பு 50% செயின் பறிப்பு குற்றங்கள் குறைந்துள்ளன. அப்படியே நடந்தாலும் அவர்களை இரண்டு, மூன்று நாட்களில் பிடித்து விடுகிறோம்.