சென்னை அடையாறில் நீதிபதி முரளிதரனின் வீடு உள்ளது. அங்கு ஆயுதப்படையைச் சேர்ந்த காவலர்கள் காவலில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில், அங்கு காவலில் ஈடுபட்டிருந்த காவலில் சரவணன் என்ற ஆயுதப்படை காவலர் திடீரென தனது நெற்றியில் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
துப்பாக்கியால் சுட்டு சென்னை ஆயுதப்படை காவலர் தற்கொலை முயற்சி! - ஆயுதப்படை காவலர்
சென்னை: அடையாறில் நீதிபதியின் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதைக்கண்ட அதிர்ச்சி அடைந்த அருகிலிருந்த மற்ற காவலர்கள், சரவணனை மீட்டு ஆபத்தான நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் தற்கொலை முயற்சிக்கான கடிதத்தையும் காவல்துறையினர் கைப்பற்றினர். அதில், அவர் தன்னுடைய தற்கொலை முயற்சிக்கு யாரும் காரணம் இல்லை என்று எழுதியுள்ளார். சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் ஆயுதப்படை காவலராக பணிபுரியும் சரவணன் திருநெல்வேலியைச் சேர்ந்தவர் ஆவார்.
இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். சமீபகாலமாக பணியில் இருக்கும்போதே காவலர் தற்கொலைக்கு முயலும் சம்பவம் நடைபெற்று வருவது அதிகரித்துள்ளது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.