சென்னை பட்டினம்பாக்கம் கடற்கரையில் தொடர்ந்து நுரை தேங்குவதால் நேற்றைய முன்தினம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு நுரை நீரை ஆய்வுக்காக எடுத்து சென்றுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் நுரை தேங்குவதற்கான காரணம் தெரிய வரும் என்று மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நேரத்தில் பட்டினப்பாக்கம் கடற்கரையில் இன்றும் அதிகளவு நுரை தேங்கியுள்ளது. இன்று விடுமுறை நாள் என்பதால் சிறுவர்கள் அந்த நுரையில் விளையாடி மகிழ்ந்து வருகின்றனர்.
நுரை தேங்குவது தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் பிரபாகரன் கூறுகையில், கடற்கரையில் இவ்வாறு நுரை தேங்குவுது இயலப்பான ஒன்றுதான். சிவப்பு பழுப்பு நிறத்திலும், வெள்ளை நிறத்திலும் நுரைகள் கடற்கரையில் உருவாகக்கூடும். கடல் உள் இருக்கும் செடிகள், மீன்களால் கரையோரம் அடித்துவருவதால் உருவாகுவது சிவப்பு பழுப்பு நிறம் நுரைகள். இது பொதுவாக அனைத்து நாடுகளிலும் உருவாகக்கூடும்.