இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையும், ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
weather report tamilnadu
மேலும், அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, அதன் சுற்றுவட்டார பகுதிகளின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையில் வெப்பம் 23 டிகிரி செல்சியஸ் முதல் 31 டிகிரி செல்சியஸ்சாக இருக்கும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என்றும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.