தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

5 மாதங்களுக்குப் பிறகு மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்! - சென்னை மெட்ரோ ரயில் நிலையம்

ஐந்து மாதங்களுக்கு மேலாக கரோனா ஊரடங்கினால் முடக்கிவைக்கப்பட்டிருந்த மெட்ரோ ரயில் சேவை சென்னை விமான நிலையத்திலிருந்து தனது பயணத்தை தொடங்கியது. இந்தச் சேவையை தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தொடங்கிவைத்து பயணிகளுடன் பயணித்தார்.

chennai metro started today
chennai metro started today

By

Published : Sep 7, 2020, 11:40 AM IST

சென்னை: கரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த மெட்ரோ ரயில் சேவை இன்றுமுதல் தொடங்கியது.

சென்னையில் விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான வழித்தடத்தில் சுமார் ஐந்து மாதங்களுக்குப் பிறகு இன்று காலை 7 மணியளவில் மெட்ரோ சேவை தொடங்கியது.

விமான பயணச்சீட்டு கட்டணங்கள், ஸ்மார்ட் அட்டை, கியூ.ஆர். குறியீடு மூலம் பயணச்சீட்டு எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் பாதுகாப்பை உறுதிசெய்ய காற்று செல்ல பாதைகள், புற ஊதாக்கதிர்கள் மூலம் கிருமிகள் அழிப்பு என நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஐந்து மாதங்களுக்குப் பிறகு மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!

மெட்ரோ ரயில் சேவையை தொடங்கிவைத்த தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் அமைச்சர் சம்பத், விமான நிலையத்திலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வரை பயணிகளுடன் பயணித்தார்.

காலை 8 மணிமுதல் 10 மணிவரையிலும், மாலை 5 மணிமுதல் 8 மணிவரையும் 5 நிமிடத்திற்கு ரயில் செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details