மெட்ரோ ரயில் நிலையத்தின் நிரந்தரப் பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, மெட்ரோ ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக பேச்சுவார்த்தை இன்று நடைபெற இருக்கிறது. எனவே மெட்ரோ ரயில் சேவை வழக்கம்போல் இன்று இயங்கும் என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மெட்ரோ ரயில் சேவை 'திடீர்' நிறுத்தம் ஏன்? - மெட்ரோ
சென்னை: சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
metro
இந்நிலையில், சில மெட்ரோ ரயில் நிலையங்களில் சமிக்ஞை (சிக்னல்) பிரச்னை காரணமாக அதன் சேவை பாதிக்கப்பட்டது. இதனால், சென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.