தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இனி 5 நிமிடத்துக்கு 1 மெட்ரோ ரயில்! - சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்

சென்னை: வார நாள்களில், பீக் ஹவர் எனப்படும் உச்ச நேரங்களில் இயக்கப்பட்டுவரும் சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் அதிகரிக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மெட்ரோ ரயில்!
மெட்ரோ ரயில்!

By

Published : Feb 12, 2021, 8:12 AM IST

இது குறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பொதுமக்கள், பயணிகளின் கோரிக்கையை ஏற்று, வார நாள்களில் (திங்கள்கிழமை - சனிக்கிழமை) உச்ச நேரங்களில் 7 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டுவரும் மெட்ரோ ரயில் சேவைகளை 5 நிமிட இடைவெளியில் இயக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இன்றுமுதல் (பிப்ரவரி 12) மெட்ரோ ரயில் சேவைகள் உச்ச நேரங்களில் (காலை 8 முதல் 10 மணி வரை, மாலை 4 முதல் 7 மணி வரை) 5 நிமிட இடைவெளியிலும் மற்ற நேரங்களில் (காலை 5.30 முதல் காலை 8 மணி வரை, காலை 10 முதல் மாலை 4 மணி வரை, இரவு 7 மணி முதல் 10 மணி வரை) 10 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி 5 நிமிடத்துக்கு 1 மெட்ரோ ரயில்!
சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இரவு 10 மணி முதல் இரவு 11 வரை 28 நிமிடங்களுக்கு பதிலாக 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை, அரசு பொது விடுமுறை நாள்களில் மெட்ரோ ரயில் சேவைகள் நாள் முழுவதும் உச்ச நேரம் இல்லாமல் (Non-peak Hours) 20 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் எனவும், பயணிகள் அதற்கேற்ப தங்கள் பயணத்தைத் திட்டமிட்டுக் கொள்ளுமாறும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details