சென்னை மெட்ரோ ரயில்வேயில் ஒப்பந்த பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி, நிரந்தர பணியாளர்களை விட கூடுதல் ஊதியம் கொடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சங்கம் துவக்கியதாக காரணம் காட்டி 8 நிரந்தர பணியாளர்களை திடீர் பணிநீக்கம் செய்து ஏப்ரல் 29ம் தேதி அன்று மதியம் உத்தரவிட்டது மெட்ரோ நிர்வாகம்.
அதைத் தொடர்ந்து ஏப்ரல் 29ம் தேதி மாலை முதல் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்தது மெட்ரோ பணியாளர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டதால், மெட்ரோ ரயில்கள் சரிவர இயங்கவில்லை. இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வு காணும் வகையில் மெட்ரோ ஊழியர் சங்கம், மெட்ரோ நிர்வாகம் மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆணையம் ஆகியவை இணைந்து நேற்று (ஏப்ரல் 30) பாரிமுனையில் உள்ள தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. சுமார் 6 மணி நேரம் நடைபெற்றும் ஊழியர்களின் கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்க மறுத்துவிட்டது.