தெற்கு வங்கக் கடல் பகுதியில் நேற்று (மே 17) மாலை நிலைகொண்டிருந்த ’ஆம்பன்’ அதி தீவிர புயல், வட திசையில் நகர்ந்து இன்று அதிகாலை 2:30 மணியளவில், உயர் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“இதன் காரணமாக, இன்று மத்திய வங்கக்கடலின் தென் பகுதிகளில் கடும் சூறாவளிக் காற்று மணிக்கு 140-165 கி.மீ வேகம் வரையிலும், தெற்கு ஒடிசா கடல் பகுதிகளில் மணிக்கு 45-65 கி.மீ வேகம் வரையிலும் வீசக்கூடும். நாளை மத்திய வங்கக்கடலின் வடக்கு பகுதி பகுதிகளில் கடும் சூறாவளிக் காற்று மணிக்கு 170-200 கி.மீ வேகத்திலும், வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்காள கடல் பகுதிகளில் மணிக்கு 45-65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இந்த சூறாவளிக் காற்று மறுநாளும் (20/5/20) நீடிக்கும்.