தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

Today Weather Report: வறண்ட வானிலையே நிலவும்

Today Weather Report: தமிழ்நாடு - புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்றும் (ஜனவரி 4), நாளையும் (ஜனவரி 5) பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்றும், நாளையும்  வறண்ட வானிலையே நிலவும்
இன்றும், நாளையும் வறண்ட வானிலையே நிலவும்

By

Published : Jan 4, 2022, 4:09 PM IST

சென்னை:Today Weather Report :இன்றும் நாளையும் தமிழ்நாடு - புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மீனவர்களுக்கான எச்சரிக்கை

ஜனவரி 4: குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மூடுபனி எச்சரிக்கை

ஜனவரி 4 முதல் 6 வரை: மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் காலை நேரங்களில் பொதுவாகப் பனிமூட்டம் காணப்படும்.

ஜனவரி 5: குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்குச் செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஜனவரி 6: தென் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

வறண்ட வானிலை

ஜனவரி 7: கடலோர மாவட்டங்கள் - புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

ஜனவரி 8: கடலோர மாவட்டங்கள் - புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும். அதிகபட்ச வெப்பநிலை 29, குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ஏதுமில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: 2000 அம்மா மினி கிளினிக் மூடல்- எடப்பாடி, டிடிவி கடும் கண்டனம்!

ABOUT THE AUTHOR

...view details