இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள காட்சிப்பதிவில், ”இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், மதுரை, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்கள், புதுவை பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நாளை ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிகக் கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களின் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.