தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை
கனமழை

By

Published : Dec 6, 2021, 2:01 PM IST

சென்னை: இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தென் தமிழ்நாடு, இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக இன்று திருநெல்வேலி, தென்காசி, தேனி, மதுரை, விருதுநகர், திருச்சி, கரூர், திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்கூடிய கனமழை பெய்யும்.

ஏனைய தென் மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன்கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். நாளை தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை உள்ளதா?

நாளை மறுநாள் கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் - புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், அதனை ஒட்டி உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் அதிகபட்ச வெப்பநிலை 31, குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு வேப்பூர் (கடலூர்), போடிநாயக்கனூர் (தேனி) தலா 10 சென்டிமீட்டர் பெய்துள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை" எனக் குறிப்பிட்டுள்ளது.

தென் தமிழ்நாட்டுப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக சென்னையில் மேகமூட்டத்துடன் காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான முதல் கனமழை பெய்துவருகிறது. குறிப்பாக நுங்கம்பாக்கம் தேனாம்பேட்டை வேப்பேரி பெரியமேடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துவருகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவின் புகழைக் காப்போரின் தியாகத்தைப் போற்றுவோம் - ஸ்டாலினின் கொடிநாள் செய்தி

ABOUT THE AUTHOR

...view details