தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

6 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை  - சென்னை வானிலை ஆய்வு மையம் - வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகத்தில் கன மழை பெய்யும்

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக இன்று (மே 26) தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain
rain

By

Published : May 26, 2021, 5:18 PM IST

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'வெப்பச்சலனம் காரணமாக இன்று தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, தென்காசி, மதுரை, நீலகிரி உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும்.

திருப்பூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவான அறிவிப்பு

27.05.2021: தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மேற்குத்தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

28.05.2021,29.05.2021: மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

30.05.2021: தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

வட தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தரைக்காற்று ஒருசில நேரங்களில் மணிக்கு 30-40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு (சென்டிமீட்டரில்)

மைலாடி (கன்னியாகுமரி) 24, இரணியல் (கன்னியாகுமரி) 19, கொட்டாரம் (கன்னியாகுமரி) 17, சேத்தியாத்தோப்பு (கடலூர்), சுராலகோடு (கன்னியாகுமரி), குழித்துறை (கன்னியாகுமரி), பூதப்பாண்டி (கன்னியாகுமரி), நாகர்கோவில் (கன்னியாகுமரி) தலா 15, கன்னியாகுமரி 13, பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) 12, பிளாண்துறை (கடலூர்), லால்பேட்டை (கடலூர்) தலா 11, சின்னக்கல்லார் (கோவை) 10, பெரியாறு (தேனி) 9, பாபநாசம் (திருநெல்வேலி) 8, சேலம் 7, பெனுகொண்டாபுரம் (கிருஷ்ணகிரி), செஞ்சி (விழுப்புரம்), அகரம் சீகூர் (பெரம்பலூர்) தலா 6 .

மீனவர்களுக்கான எச்சரிக்கை

26.05.2021 , 27.05.2021 : கன்னியாகுமரிக்கடல் பகுதி , மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

26.05.2021: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

26.05.2021: கேரள கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

26.05.2021: வட மேற்கு வங்கக் கடல், ஒடிசா, மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 130 முதல் 140 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 155 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

26.05.2021 முதல் 30.05.2021 வரை: தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேலும் இப்பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்திய செயற்கைக்கோள் படத்தின்படி அதி தீவிரப் புயல் (யாஸ்) பாலசுருக்கு அருகே கரையைக் கடந்தது.

இதையும் படிங்க: கன மழை: குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம்!

ABOUT THE AUTHOR

...view details