தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

‘4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்’ - சென்னை வானிலை ஆய்வு மையம் - rain news

சென்னை: புரெவி புயல் வலுவிழந்து தற்போது மன்னார் வளைகுடா பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நீடித்துவருவதால், தமிழ்நாட்டில் நான்கு மாவட்டங்களில் இன்றும் (டிச. 06), நாளையும் (டிச. 07) கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்’ - சென்னை வானிலை ஆய்வு மையம்
‘நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்’ - சென்னை வானிலை ஆய்வு மையம்

By

Published : Dec 6, 2020, 2:27 PM IST

இது குறித்து செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், “மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தொடர்ந்து அதே இடத்தில் நிலைகொண்டுள்ளது.

இதன் காரணமாக இன்றும், நாளையும் ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசான முதல் மிதமான இடி மின்னலுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த இரு தினங்களுக்கு நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம் (சென்டிமீட்டரில்) முத்துப்பேட்டை (திருவாரூர்) 10. மகாபலிபுரம் செங்கல்பட்டு 7. குடவாசல் (திருவாரூர்), நன்னிலம் (திருவாரூர்) தலைஞாயிறு (நாகப்பட்டினம்) 6. திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), செய்யூர் (செங்கல்பட்டு), கொள்ளிடம் (நாகப்பட்டினம்), சோழவரம் (திருவள்ளூர்), திருப்பூண்டி (நாகப்பட்டினம்), சிதம்பரம் (கடலூர்) 5. சோளிங்கநல்லூர் (சென்னை), செங்குன்றம் (திருவள்ளூர்), பேராவூரணி (தஞ்சாவூர்), நாகப்பட்டினம், தஞ்சாவூர், வேதாரண்யம் (நாகப்பட்டினம்), பூண்டி (திருவள்ளூர்), பரங்கிப்பேட்டை (கடலூர்), மன்னார்குடி (திருவாரூர்), மதுக்கூர் (தஞ்சாவூர்), நாகப்பட்டினம், திருவாரூர், செம்பரம்பாக்கம் (திருவள்ளூர்), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), திருத்தணி (திருவள்ளூர்) 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கையைப் பொறுத்தவரை இன்று குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அதேபோன்று இன்றும், நாளையும் தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு - மாலத்தீவு பகுதி, கேரள கடலோரப் பகுதிகளில் மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க...பாதுகாப்பாக வாழத்தானே வீடு கேட்கிறார்கள் பழங்குடியின மக்கள்... காப்பாற்றுமா அரசு?

ABOUT THE AUTHOR

...view details