சென்னை: தமிழ்நாட்டின் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று (மே.29) செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது.
அதில், "தமிழ்நாட்டில் ஜூன் 2ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழையும், ஒரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
'யாஸ்' புயலுக்கும் கன்னியாகுமரிக்கும் என்ன தொடர்பு?
ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும். அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னையை உள்ளடக்கிய வட தமிழ்நாட்டின் 13 மாவட்டங்களில் இயல்பான வெப்பநிலையை விட அதிகபட்சமாக 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குமரிக்கடல், அந்தமான், இலங்கையின் தெற்கு கடலோர பகுதிகளில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இரு நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.