தமிழ்நாடு

tamil nadu

மதசார்பற்ற நாட்டை பிளவுப்படுத்த முயற்சி - மாணவர்கள் கண்டனம்

By

Published : Dec 18, 2019, 4:52 PM IST

சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில் சென்னை மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

students
students

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும், டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதைக் கண்டித்தும் 200க்கும் மேற்பட்ட ஜெயின் கல்லூரி மாணவர்கள் வளாகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாணவர்கள், “குடியுரிமை திருத்த சட்டம் தேவையற்றது. இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை இல்லை என்றும், இலங்கை, மியான்மர் ஆகிய நாட்டில் இருந்து வரும் மக்களுக்கு குடியுரிமை இல்லை எனவும் கூறியுள்ளனர்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி எந்த ஒரு குடிமகனுக்கும், மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்கப்படக் கூடாது என்றுள்ளது. இந்த சட்டத்தால், பாஜக அரசு மதசார்பற்ற நாட்டை பிளவுப்படுத்த முயற்சிக்கிறது. இவ்விவகாரத்தில் தமிழ்நாடு அரசு என்ன செய்கிறதென்றே தெரியவில்லை. குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்”என்றனர்.

குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து ஜெயின் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

பின்னர், தகவலறிந்து அங்கு வந்த மீனம்பாக்கம் காவல் துறையினர், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதையும் படிங்க: போராட்டம் தொடரும் - சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் திட்டவட்டம்!

ABOUT THE AUTHOR

...view details