சென்னை: மெரினா கடற்கரையை அழகுபடுத்த 'ப்ராஜெக்ட் ப்ளூ' திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் கடற்கரையில் உள்ள கழிவறை, நடைமேடை, பூங்காக்களை சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் பார்வையிட்டார். மெரினா கடற்கரையின் அழகை மாற்றுத்திறனாளிகள் கடலருகே சென்று ரசிக்கும் விதமாக கடற்கரை மணல்வெளியில் அமைக்கப்படவுள்ள நிரந்தரப்பாதை குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை மேயர் மகேஷ்குமார்,
"வெளிநாட்டு கடற்கரைகளைப் போல மெரினா கடற்கரையையும் அழகுபடுத்த முதலமைச்சரின் கனவுத் திட்டமான 'ப்ராஜக்ட் ப்ளூ' திட்டம் அமல்படுத்தப்படுகிறது. அதன்படி மெரினாவில் உள்ள கழிவறை, குடிநீர் இணைப்புகள், பூங்கா, மாற்றுத்திறனாளிகளுக்கு அமைக்கப்படவுள்ள நிரந்தரச்சாலை குறித்து இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தோம். மெரினா நீச்சல் குளத்தை மேம்படுத்தும் பணியில் மாநகராட்சி ஈடுபட உள்ளது.