சென்னை:தேசிய குடற்புழு நீக்க வாரம் நேற்று(மார்ச்.14) முதல் வரும் 21ஆம் தேதி வரை கொண்டாடப்படும் நிலையில், சென்னை எம்ஜிஆர் நகர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு குடற்புழு நீக்கத்திற்கான அல்பெண்டசோல் மாத்திரைகளை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , “பள்ளி மாணவர்களில் 1 முதல் 20 வயது வரை உள்ளவர்களுக்கு குடற்புழு காரணமாக வாந்தி வயிற்று வலி, காய்ச்சல், அனிமிகா பாதிப்புகள் ஏற்படுகின்றன. அவற்றை தடுக்க 6 மாதத்திற்கு ஒரு முறை குடற்புழு நீக்க மாத்திரைகளை எடுத்துக் கொள்வது அவசியம். சென்னை மாநகராட்சியில் 15 லட்சத்து , 55 ஆயிரத்து 354 குழந்தைகளுக்கு ஒரு வாரத்தில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுள்ளது.