தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஒருமையில் அதட்டினாரா கே.என்.நேரு? - மேயர் பிரியா விளக்கம் - Chennai Municipal Corporation Mayor Priya

மேயரை அமைச்சர் ஒருமையில் பேசினாரா? என பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்கு மேயர் பிரியா விளக்கமளித்துள்ளார்

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 25, 2022, 1:03 PM IST

சென்னை: அமைச்சர் கே என் நேரு தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவை ஒருமையில் பேசிய காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலானது.

இந்தக் காணொளி வைரலானதை அடுத்து அந்த நிகழ்வு தொடர்பாக விளக்கம் அளித்து, மாநகராட்சி மேயர் பிரியா காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அக்காணொளியில், "தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் அறையில் ( Chamber) எப்பொழுதும் அமைச்சர் தான் செய்தியாளர்களை சந்திப்பார். அதனால் தான் நான் அமைச்சரிடம் நான்‌ பேசவா என்று கேட்டேன்.

அவர் என்னிடம் சாதாரணமாகத்தான் நீ பேசுமா என தெரிவித்தார். அது என்னை திட்டியோ அல்லது கடுமையாகவோ பேசவில்லை. அவர் எப்பொழுதும் என்னிடம் மரியாதையாக தான் நடந்து கொள்வார். அவரது பெண் போன்று தான் என்னை கவனித்துக் கொள்வார்.

ஒருமையில் பேசினார் என்பதை விட உரிமையில் பேசினார் என்று தான் நான் நினைக்கிறேன். கட்சியில் மூத்த தலைவர் அது மட்டுமில்லாமல் எங்களுடைய துறையின் அமைச்சர் அவர் மீது எப்பொழுதும் எனக்கு மரியாதை இருக்கும்.

நான் மேயராக பொறுப்பேற்று ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ளது. இந்த ஆறு மாதங்களில் நான் எந்த பணியை அவரிடம் கொண்டு சென்றாலும் அவர் இல்லை என்று சொன்னதில்லை. எனக்கு அவர் எப்போதும் உறுதுணையாக தான் இருக்கிறார்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: "தண்ணீர் வினியோகம் சரியாக இல்லை" - மதுரை மாமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details