தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மெரினா பீச்: பாதுகாவலர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை - நடவடிக்கை எடுக்குமா அரசு! - மெரினா கடற்கரை

சென்னை மெரினா கடற்கரையில், கடற்கரை மீட்பு படையினர் தங்க இடமின்றி தவிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Chennai Marina Beach Rescue Troops are stranded at Marina
Chennai Marina Beach Rescue Troops are stranded at Marina

By

Published : Oct 10, 2021, 9:56 AM IST

சென்னை: பிரபல சுற்றுலாத் தலமாகவும், பொழுதுபோக்குத் தலமாகவும் புகழ்பெற்ற மெரினா கடற்கரை உள்ளது.

இங்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அதில் பெரும்பாலான பொதுமக்கள் கடலில் குளிப்பது வழக்கம். அப்படி குளிக்கும்போது ஒரு சிலர் ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் மூழ்கி உயிரிழக்கும் நிலை ஏற்படும்.

இந்த அசம்பாவிதங்களைத் தவிர்த்து, உயிர்களை காப்பதற்காக தீயணைப்பு மற்றும் மீட்பு படை சார்பாக 25 பேர் கொண்ட குழு, 2020ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்தக் குழு கடந்த ஒன்றரை ஆண்டுகளில் கடல் அலையில் சிக்கிய 8 பேரை உயிருடனும், 30 பேரை இறந்த நிலையிலும் மீட்டுள்ளது.

மேலும், கடல் அலை அதிகமாக இருந்தால், பொதுமக்கள் கடலில் குளிப்பதை தடுத்து நிறுத்தியும், பீச் பக்கி வாகனம் மூலமாக ரோந்து பணிகளிலும் இந்தக் குழு ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடல் அலையில் சிக்கிய பல உயிர்களை காப்பாற்றியும், மரணத்தை தடுக்கும் வகையில் செயல்பட்டும் வந்த மீட்பு படை குழுவினர் தங்களது உடல்நலனை பாதுகாக்க முடியாமல் மழை காலத்தில் ஒதுங்க இடவசதியின்றி தவித்து வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

தீயணைப்பு மற்றும் மீட்பு படை மெரினா குழுவினர் வெயில் மற்றும் மழை காலங்களில் ஓய்வு எடுப்பதற்காகவும், மீட்க தேவைப்படக்கூடிய படகு, பக்கி வாகனம் உள்ளிட்ட உபகரணங்களை வைப்பதற்காகவும் கடற்படை மீட்பு பணிகள் நிலையம் என்ற பெயரில் மெரினா மணற்பரப்பில் கூடாரம் ஒன்றை அமைத்து கொடுத்தனர்.

பாதுகாவலர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை

ஆனால் இந்தக் கூடாரம் தற்போது பராமரிப்பன்றி கிடப்பதால் மீட்பு படை குழுவினர் மழை, வெயில் காலங்களில் ஒதுங்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் இதனால் உபகரணங்கள் பழுதாவதாகவும், உடனடியாக தமிழ்நாடு அரசு பராமரிப்பன்றி கிடக்கும் கூடாரத்தை ஒழுங்கப்படுத்தி தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: குழந்தைகளை காப்பாற்ற முதலமைச்சர் தனிப்பிரிவில் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details