சென்னை:ஒரு பெண்ணின் கைகள் கட்டப்பட்ட நிலையில் ஒருவர் தாக்கி தலைமுடியை அறுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு வீட்டிற்குள் ஒரு பெண் மற்றும் இரண்டு நபர்கள் இருக்கும் நிலையில் பின்புறம் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருக்கும் ஒரு பெண்ணை ஆபாசமாக திட்டி எட்டி உதைக்கிறார். பின்னர் அந்த பெண்ணின் தலைமுடியை கத்திரிக்கோலால் வெட்ட முயல்கிறார்.
சரியாக வெட்ட முடியாததால் அரிவாள் மனையை கொண்டு வந்து அந்த பெண்ணிடம் பேசியபடியே தலைமுடியை அறுக்கிறார். இது தொடர்பாக நடத்திய விசாரணையில், கைகள் கட்டப்பட்டு கிடக்கும் பெண் அனு(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பதும், முடியை அறுக்கும் நபர் கார்த்தி என்பதும் தெரியவந்தது. இரண்டு பேரும் இரண்டாவது முறை திருமணம் ஆனவர்கள் என்பதும் தெரியவந்தது.